பிரான்சில் யாழ் இளைஞன் லக்சன் ரயில் பாய்ந்து இறந்தற்கு சின்னவீடு ஹோட்டல் அரவிந் முதலாளியா காரணம்? video
பிரான்ஸ் பரிஸ் Le Bourget ரயில் நிலையத்தில் 24 வயதான யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த இளைஞன் லக்சன் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பாக அவனது நண்பர்கள் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனுக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை எனவும் அதன் காரணமாக அவன் மிகக் குறைந்த சம்பளத்தில் பிரான்ஸ் பாரிஸ் Le Bourget பகுதியில் உள்ள இந்திய உணவகமான சின்னவீடு என்ற ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளான். ஆனால் அவனு்ககு அந்த ஹோட்டலின் முதலாளியான அரவிந் என்பவன் 3 மாத காலமாக சம்பளம் கொடுக்காமல் 2 நேர சாப்பாடு மட்டுமே கொடுத்து அவனை கடுமையான வருத்தி வந்துள்ளான். இதனால் மனமுடைந்த நிலையில் குறித்த இளைஞன் லக்சன் ரயில் நிலையத்தில் தற்கொலை செய்துள்ளதாக அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.

