யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வதியும் நபர் ஒருவர் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவினை தமிழர் பாரம்பரிய முறைப்படி கொண்டாடியுள்ளனர்.
இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டும் பாரம்பரியத்தை நினைவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேநீருக்குப் பதிலாக இளநீர் கொடுக்கப்பட்டதுடன் உணவுகள் மட்பாத்திரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ஓலைகளினால் மாத்திரமே இந்த அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த அலங்காரங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





















