லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களால் பெரும் பதற்றம்!! காரணம் காத்தான்குடி நபர்களா???
மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக வெளியான தகவலால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் சுற்றுலா நோக்கில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக அவரச இலக்கத்தின் மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த விடுதி பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டதுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் எந்தவொரு ஆபத்தான பொருட்களும் மீட்கப்படவில்லை. எனினும் சுற்றுலா பயணிகளிடம் வாக்குமூலம் ஒன்றை பொலிஸார் பெற்றுச் சென்றுள்ளர்.
மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த அவர்கள், நேற்று உல்லைப பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.
இதன்போது காத்தான்குடி பகுதியில் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டிருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களின் ஆடை தொடர்பாக சிலர் அங்கு கருத்து வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் குறித்த குழுவினர் முரண்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

