யாழ் விசேட குற்ற பிரிவு பொலிஸ் வசீபன் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை மேற்கொண்ட பச்சைக் கள்ளி!!
யாழ்ப்பாணத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பச்சைக் கள்ளி ஒருத்தி நேர்மையான முறையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் வசீபனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாண விசேட குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் வசீபனுக்கு எதிராகவே முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸ் உத்தியோகஸ்தர் இலஞ்சம் கோரியதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே சில சட்டத்தரணிகளின் காணி மோசடிகள் மற்றும் ஏராளமானவர்களின் பண மோசடிகள் தொடர்பாக வசிபன் மற்றும் அவரது பொறுப்பதிகாரி உட்பட்டவர்கள் மிகவும் கடும் நடவடிக்கைகள் எடுத்து மோசடியாளர்களை கலங்கடிக்கச் செய்திருந்தாா்கள். இதனால் குறித்த சட்டத்தரணிகள் மற்றும் மோசடியாளர்கள் திட்டமிட்டு நேர்மையாகச் செயற்படும் வசிபன் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை வை்தது முறை்ப்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
கீழே காட்டப்பட்டுள்ள சத்தியப்பிரணமானம் மிகவும் திட்டமிட்டு தயாரிகக்ப்பட்டு வசீபனுக்கு எதிராக முறையிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே நீதியான முறையில் செயற்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றி பொலிஸ் அதிகாரியையும் இந்த மோசடியாளர்கள் திட்டமிட்டு குற்றம் சாட்டி வேறு பிரிவுக்கு மாற்ற வைத்தார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

