முல்லைத்தீவில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே ஒருவர் பலி (Photos)
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை வீதியை கொக்குளாய் முகத்துவாரம் பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி வந்தபோது வீதியினை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இதில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன் அதில் பயணித்த மற்ற நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


