புதினங்களின் சங்கமம்

செல்வச்சந்நிதி கோவில் குருக்களும் உதவியாளரும் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது ஏன்? வீடியோ

1986ம்.04.20 அன்று கிட்டதட்ட 39 வருடங்களுக்கு முன் செல்வச்சந்நிதி முருகன் கோவில் தேர் அரச படையினரால் தீ மூட்டி அழிக்கப்பட்டது. குறித்த தேர் அழிக்கப்படுவதற்கு இரு வருடங்களுக்கு முன்னரே அந் நேரத்திலேயே ஒரு கோடி ரூபா செலவில் கட்டப்பட்டதாகும். தென்னிந்தியாவின் திருவாரூர் தேரின் பிரமாண்டத் தோற்றத்திற்கு அடுத்தாக இந்த சந்நிதி தேர் 45 அடி உயரத்தில் இந்திய சிற்பாச்சாரியர்களால் கட்டப்பட்டது.

தொண்டமனாற்றுக்கு அடுத்த கரையில் முகாமிட்டிருந்த படையினர் நீர்பாசண அணைக்கட்டுப் பாலத்தின் ஊடாக முன்நோக்கி வந்து சந்நிதி கோவிலை ஆக்கிரமித்து அன்று அதிகாலையே எரியூட்டி அழித்தார்கள். இந்தக் கோவிலின் குருக்களான சின்னையாக் குருக்கள் படையினர் முன்னேறுவதை அறிந்து அப்பகுதியிலிருந்து தப்பித்தார். அதன் பின்னர் இலங்கை வானொலி செய்தியில் தொண்டமனாறு சந்நிதிகோவில் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்கு நித்திய பூசையைத் தொடரலாம் என விடுத்த அறிவிப்பை அடுத்து சின்னையாக் குருக்களும் அவரது உதவியாளரும் கோவில் பகுதிக்கு சென்ற போது அவர்களை வரவேற்ற படையினர் அவர்களது அனைத்து ஆடைகளையும் அகற்றிவிட்டு சுட்டுக் கொலை செய்தார்கள். அதன் பின்னர் மீண்டும் அப்பகுதி புலிகளால் கைப்பற்றப்பட்ட போது குருக்கள் மற்றும் உதவியாளர்களின் சடலங்கள் ஆடைகள் அற்று அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

தேர் தீயூட்டி அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் திருகோணமலையில் கந்தாளாய் குளம் உடைப்பெடுத்து நுாற்றுக்கணக்கானவர்கள வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போனார்கள்.