புதினங்களின் சங்கமம்

சங்கானை மாவடி வைரவரின் அடங்கப்பிடாரித்தனத்தை அடக்குவாரா GA பிரதீபன்?

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லையினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இதனை கட்டுப்படுத்த நீண்டகாலமாக பலர் முயற்சி எடுத்தபோதும் அவை கைகூடாத நிலையில் தற்போதைய மாவட்ட நிர்வாகம் பலருடன் கலந்துரையாடி ஒலிபெருக்கித் தொல்லையினை கட்டுப்படுத்துவதற்கு விதிமுறைகளை அறிவிருந்தது. அதனை கண்காணிக்கும் பொறுப்பு பொலிசாருக்கு மேலதிகமாக பிரதேச செயலகங்களுக்கும் வழங்கப்பட்டன.சில காலம் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தபோதும் மீண்டும் குறிப்பாக சில ஆலயங்களில் ஒலிபெருக்கிகளின் இரைச்சல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன.
சங்கானை பிரதேச செயலகத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ள மாவடி ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினர் கட்டுப்பாடுகளை மீறி 9 ஒலிபெருக்கிகளையும் அதிகளவான ஒலிப்பெட்டிகளையும் பொருத்தி அதிகமான சத்தத்துடன் ஒலியெழுப்பிவருவதாக பொதுமக்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனால் அவ்வாலயப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீற்றருக்கும் அதிகமான பிரதேசம் ஒலியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புத்தாண்டு என்பதால் அதிகளவான மக்கள் சங்கானை நகரத்தில் பொருட்கொள்வனவிற்காக கூடியுள்ளநிலையில் அதிகரித்த ஒலியினால் பொதுமக்களும் வர்த்கர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கானை பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் வினாவெழுப்புகின்றனர்.