புதினங்களின் சங்கமம்

யாழில் அப்பாவிகளின் காணிகளை கள்ள உறுதியில் விற்பனை செய்து சிறைக்குள் இருக்கும் லோயர் விஜயரத்தினத்துக்கு ஆதரவாக சுமந்திரன் நீதிமன்றில் ஆயர்.

காணி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சார்பில் யாழ்ப்பாணம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் நகரையண்டிய பகுதிகளில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி விஜயரத்தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஒரு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மற்றொரு காணி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னைய வழக்கில் பிணையில் விடுவிக்க அவருக்கு ஆஜரானவர் தமிழ்த்தேசியப் பற்றாளர் என கருதப்பட்ட சட்டத்தரணி குருபரன் ஆவார்.

இந்த விவகாரத்தில் கைதான மேலும் சிலரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் சார்பில் நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை ஆதரித்து எம்.ஏ.சுமந்திரனும், முன்னாள் யாழ் இந்துக்கல்லுாரி அதிபர் நிமலன் மற்றும்ஏனையவர்களை ஆதரித்து பைசர் முஸ்தபாவும் முன்னிலையாகியிருந்தனர்.

அரசசட்டத்தரணியின் ஆட்சேபணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.