ஊடக செயலமர்வுக்குச் சென்ற இளம் பெண் மாயம்
வரக்காபொல, தொலங்கமுவ பகுதியை சேர்ந்த பாத்திமா இல்மா எனும் 20 வயது இளம் பெண்ணை நேற்று முதல் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று(10) காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட மேற்படி பெண், மாவனெல்லை பகுதியில் இடம்பெறும் ஊடக செயலமர்வு ஒன்றுக்கு செல்வதாக வீட்டாரிடம் கூறிச் சென்றுள்ளார்.
எனினும் மாலையாகியும் குறித்த இளம் பெண் வீடு திரும்பாததால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே மேற்படி பாத்திமாஇல்மா பற்றிய தகவல் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக பெற்றோருக்கு அறிவித்து உதவுங்கள்.
077 8161 246
077 6159 944
075 5923 249

