புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு ! நீடிக்கும் மர்மம் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வழக்கம்போல நேற்று மீன்பிடிக்கச் சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இரவு முழுவதும் தேடியதில் இன்று காலை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து மல்லாவி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் செல்வபுரம் வவுனிக்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா சுரேஷ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார்.

இதேவேளை குறித்த நபர் பகல் வேளைகளில் மேசன் தொழில் செய்வதோடு, மாலை வேளைகளில் குறித்த குளத்தில் சென்று மீன் பிடித்து தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.