புதினங்களின் சங்கமம்

பளை பிரதேச செயலகத்தில் 2 நாள்களில் அடுத்தடுத்து மூன்று உத்தியோகத்தர்கள் மரணம்! (Photos)

பளை – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய மூன்று உத்தியோகத்தர் இரு நாள்களில் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளமையால் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். பிரதேச மக்களும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய விசாகரத்தினவேல் சுகன்ஜா கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தார்.

நிர்வாகக் கிளையில் முகாமைத்துவ உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இரவிச்சந்திரன் ரிதுஷன் கடந்த 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார்.

திட்டமிடல் கிளையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய நடராஜா பிறேமவாசன் கடந்த 20 ஆம் திகதி விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையில், 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இரண்டு நாள்களில் மூன்று உத்தியோகத்தர்களை இழந்தமையால் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆறாத மனக் கவலைகளுடன் பணியாற்றி வருகின்றனர்.

Image may contain: 1 person, close-upImage may contain: 1 personImage may contain: 1 person