புதினங்களின் சங்கமம்

50 வயதான கோடீஸ்வரரை அந்த ஆசை காட்டி நடுக்கடல் கொண்டு சென்று கொலை செய்த பெண் சட்டத்தரணி பிரீத்தா!!

சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (50). கடந்த ஜூன் 21-ம் தேதி திடீரென மாயமாகினார். இதுகுறித்து அவரின் உறவினர் அரவிந்த், அடையாறு காவல்நிலையத்தில் 28.6.2019-ல் புகார் கொடுத்தார். சுரேஷ் பரத்வாஜை போலீஸார் தேடினர். அடையாறு துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டி ஜெயசீலன், மனோகரன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், “சுரேஷ் பரத்வாஜ் காணாமல் போனதாக எங்களிடம் புகார் கொடுத்ததும் அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். தொடர்ந்து அவரோடு தங்கியிருந்த சித்தியிடமும், கார் டிரைவரிடமும் விசாரித்தோம். கடந்த 21-ம் தேதி, அடையாறு இந்திரா நகரில் குடியிருக்கும் வழக்கறிஞர் பிரீத்தா என்பவரின் வீட்டுக்கு சுரேஷ் பரத்வாஜ் சென்றது தெரியவந்தது. அதற்கான ஆதாரமாக அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சுரேஷ் பரத்வாஜ், பிரீத்தா வீட்டுக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனால் பிரீத்தாவிடம் விசாரணை நடத்த அவரின் வீட்டுக்குச் சென்றோம். ஆனால் அவர் அங்கு இல்லை. இந்தச் சூழ்நிலையில் சுரேஷ் பரத்வாஜின் செல்போன், காசிமேடு பகுதியில் கடைசியாக சிக்னல் காட்டியதோடு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தோம். காசிமேடு பகுதியில் விசாரணை நடத்திவந்த நேரத்தில்தான் திருவொற்றியூரைச் சேர்ந்த குடுமி பிரகாஷ் அவரின் கூட்டாளிகளான திருவொற்றியூரைச் சேர்ந்த படகு டிரைவர் சுரேஷ், மனோகர், எர்ணாவூரைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி பாலசந்தர், எண்ணூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா, வியாசர்பாடியைச் சேர்ந்த தொழிலாளி சதீஷ்குமார் என 6 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜை கொலை செய்துவிட்டு கடலில் சடலத்தை தூக்கி வீசிவிட்டோம் என்று கூறினர். குடுமி பிரகாஷ் அளித்த வாக்குமூலத்தில் வழக்கறிஞர் பிரீத்தா கூறியதால்தான் சுரேஷ் பரத்வாஜை கடலுக்குள் படகில் அழைத்துச் சென்று கொலை செய்தோம் என்று தெரிவித்தார். இதனால் வழக்கறிஞர் பிரீத்தாவைத் தேடிவந்த நிலையில் அவரை நேற்று பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது சில முக்கிய தகவல்களை தெரிவித்தார்.

பிரீத்தா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இவரின் தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரின் சகோதரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி. பிரீத்தாவின் கிளைன்ட் தொழிலதிபர் சுரேஷ்பரத்வாஜ். பிரீத்தாவிடம் சுரேஷ் பரத்வாஜ், தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கிவிட்டு ஏமாற்றிவருகிறார். அவரிடமிருந்து பணத்தை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். அதற்கு பிரீத்தாவும் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து சுரேஷ் பரத்வாஜின் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் பிரீத்தா விசாரித்துள்ளார். அப்போது அவர் சொன்ன தகவலைக் கேட்டு பிரீத்தா அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது, பணிப்பெண் மீது சுரேஷ் பரத்வாஜிக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சுரேஷ் பரத்வாஜின் நோக்கத்தைத் தெரிந்த வழக்கறிஞர் பிரீத்தா, வெளிப்படையாகவே பேசியுள்ளார். அதன்பிறகு வழக்கறிஞர் பிரீத்தா கேட்ட தொகையை சுரேஷ் பரத்வாஜ் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் பணிப்பெண், காசிமேடு பகுதியில் உள்ள கடலில் எங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். உடனே வாருங்கள் என்று சுரேஷ் பரத்வாஜிக்கு பிரீத்தா தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை நம்பி அவரும் காசிமேடு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு குடுமி பிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் படகில் சுரேஷ் பரத்வாஜை கடலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். கடலில் குறிப்பிட்ட தூரம் சென்றபிறகு அங்கு இன்னொரு படகில் பணிப்பெண் இருந்துள்ளார். அதைப்பார்த்ததும் சுரேஷ் பரத்வாஜ் சந்தோஷமடைந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பிரீத்தா பணியாற்றிவருகிறார். இவரின் தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரின் சகோதரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி. பிரீத்தாவின் கிளைன்ட் தொழிலதிபர் சுரேஷ்பரத்வாஜ்.

போலீஸ் விசாரணை அதிகாரி

இதையடுத்து, குறிப்பிட்ட தொகை சுரேஷ் பரத்வாஜிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. அந்தத் தொகையை சுரேஷ் பரத்வாஜ் கொடுத்துள்ளார். அதன்பிறகுதான் கடந்த 21.6.2019-ம் தேதி, பணிப்பெண்ணைச் சந்திக்க சுரேஷ்பரத்வாஜை கடலுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர் குடுமிபிரகாஷ் தலைமையிலான டீம். அப்போது பிரீத்தாவும் படகில் இருந்ததாக குடுமி பிரகாஷ் தெரிவித்துள்ளார். கடலில் 12 நாட்டிங்கால் மைலுக்குச் சென்ற படகு, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது பணிப்பெண் எங்கே என்று சுரேஷ் பரத்வாஜ் கேட்டுள்ளார். அதற்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார் என்று குடுமி பிரகாஷ் டீம் கூறியுள்ளது.

இந்தச் சமயத்தில் படகின் துடுப்பால் சுரேஷ் பரத்வாஜின் தலையில் ஓங்கி அடித்த அந்த டீம், அவரை அப்படியே கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளது. உயிருக்குப் போராடிய சுரேஷ் பரத்வாஜ், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் கரைக்குத் திரும்பியுள்ளனர். இதற்காக குடுமி பிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு குறிப்பிட்ட தொகை கைமாறியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான் வழக்கறிஞர் பிரீத்தாவுக்கும் குடுமி பிரகாஷிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் குடுமி பிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டனர். நீண்ட தேடலுக்குப்பிறகு வழக்கறிஞர் பிரீத்தாவை கைது செய்துள்ளோம்” என்றார்.

சுரேஷ் பரத்வாஜ் பின்னணி குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவருக்குச் சொந்தமாக சென்னையில் பல இடங்களில் வீடுகள் உள்ளன. அதன்மூலம் வாடகை மட்டுமே சில லட்சம் ரூபாய் மாதந்தோறும் கிடைத்துள்ளது. மேலும், பங்குச் சந்தை முதலீடு உட்பட பல தொழில்களிலும் சுரேஷ் பரத்வாஜ் ஈடுபட்டுவந்துள்ளார். இவரின் வீட்டில் அந்தப் பணிப்பெண், 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்துவந்துள்ளார். அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். சமீபகாலமாகத்தான் அந்தப் பெண்ணுக்கும் சுரேஷ் பரத்வாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பஞ்சாயத்து பலரிடம் சென்றுள்ளது. இறுதியில்தான் வழக்கறிஞர் பிரீத்தாவிடம் சுரேஷ் பரத்வாஜ் தகவலைத் தெரிவித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலுக்குள் வீசப்பட்ட தொழிலதிபரும் கோடீஸ்வரருமான சுரேஷ் பரத்வாஜின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனெனில் அவரின் சடலம் வேறு எங்காவது ஒதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் வழக்கறிஞர் பிரீத்தாவுக்கும் அவரது அப்பா மற்றும் சகோதரிக்கும் சுமுகமான உறவு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட வழக்கறிஞர் பிரீத்தாவுக்கு ஆதரவாக சில வழக்கறிஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். போலீஸாரின் கேள்விகளுக்கு சட்டரீதியாகவே பிரீத்தா தெளிவாக பதிலளித்தார். இதனால் பிரீத்தாவை போலீஸ் காவலில் எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பிரீத்தா தரப்பில் பேச அவருக்கு வேண்டப்பட்ட சிலரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம். இதற்கிடையில் காவல் நிலையத்துக்கு பிரீத்தாவுக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்கள் சிலர், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்கிறோம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் வழக்கறிஞர் பிரித்தா அளித்த வாக்குமூலம் காவல்துறையினரையும் கோடீஸ்வரர் சுரேஷ் பரத்வாஜ் குடும்பத்தினரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.