புதினங்களின் சங்கமம்

வடமராட்சி கிழக்கில் கைப்பற்றப்பட்டது என்ன தெரியுமா?

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாய் பகுதியில் இன்று (23) காலை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இந்தச் சுற்றிவளைப்பில் சுமார் 40 கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றபட்டது. இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.