மாணவர்களை மூர்க்கத்தனமாக கதிரைகளால் தாக்கியயாழ் மத்தியகல்லுாரி ஆசிரியர் லோகநாதன்
யாழ் மத்தியகல்லுாரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் லோகநாதன் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் லோகநாதன் குறித்த வகுப்பு ஒன்றில் மாணவர்கள் சத்தம் எழுப்பியதை யார் என கேள்வி கேட்ட நிலையில் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த மாணவர்கள் சிலர் யாழ் போதனா வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

