புதினங்களின் சங்கமம்

யாழில் . விடுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்  ஆணொருவர் நேற்றைய தினம் (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.. தென்னிலங்கையை சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த மூன்று நாட்களாக அந்த தங்குமிடத்தில் தங்கி இருந்தார் எனவும் , அந்நிலையில் இன்றைய தினம் காலை உயிரிழந்த நிலையில், சடலமாக காணப்பட்டதை அடுத்து , விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.