கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் இதுவரையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தவாரம் ஒருவரும் நேற்றைய தினம் (15.03.2025) கஞ்சா கடத்தல மற்றும் வாள் வெட்டுக் குழுவை நடாத்தியதாக கருதப்படும் வலையொளியளரான (youtuber) கணவன் கார்த்தி அவனது மனைவி உள்ளடங்களாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம்16.03.2025 கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று அவர்கள் சிறைக்கு அனுப்பபட்டனர்.





