புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தில் 24 வயது பெட்டையை கட்ட 24 பவுன் தாலியுடன் வந்த 42 வயது ஜேர்மன் மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி!!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….
கௌசல்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புத்தூரை சேர்ந்த 24 வயது அழகிய இளம்பெண். 3 பெண் பிள்ளைகளை கொண்ட அக் குடும்பத்தில் கௌசியே மூத்தவர் ஆவார். அவரது தந்தை காவலளியாக இருக்கிறார். அவரது தாய், மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கே கட்டிக் கொடுப்பது என கங்கணம் கட்டி திரிந்துள்ளார்.
சிறுப்பிட்டி புறோக்கர் மூலம் ஜேர்மனியை சேர்ந்த 42 வயதான கபிலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன் திருமண குறிப்பு கிடைத்துள்ளது. கபிலனின் உருவம், வயது போன்றவற்றை காரணம் காட்டி கௌசி, கபிலனை மறுத்துள்ளார். எனினும் கௌசியை கடுமையாக கண்டித்த தாய், திருமணப் பேச்சை முன்னெடுத்து சென்றுள்ளார்.
கபிலனின் பெற்றோர் சீதனப் பேச்சை எடுத்துள்ளனர். அப்போது கபிலனை இரகசியமாக போனில் தொடர்புகொண்ட கௌசியின் தாய், தங்களிடம் சீதனத்துக்கு ஏதும் இல்லை என்று அழுது புலம்பியுள்ளார். ஏற்கனவே கௌசியின் அழகில் மயங்கியிருந்த கபிலன், பெற்றோர் கேட்கும் சீதனத்தை தருவதாக ஒத்துக்கொள்ளுங்கள் என்றும், அதற்கான பணத்தை இரகசியமாக தான் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் திருமணப் பேச்சு முன்னெடுக்கப்பட்டு திருமண நாளும் குறிக்கப்பட்டது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் தான் இலங்கை வருவதற்கான விமான ரிக்கெட்டை முற்பதிவு செய்த கபிலன், கௌசியின் வயது எண்ணிக்கை வருமாறு 24 பவுனில் தாலியும் செய்துள்ளார்.
கபிலன் அனுப்பிய பணத்தில் மகளுக்கு நகைகள், சேலை என வாங்கி குவித்துள்ளார் கௌசியின் தாயார்.
திருமணத்துக்கு ஒரு கிழமை இருக்கையில் யாரும் எதிர்பாராத வகையில், தான் காதலனுடன் செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கலியாணத்துக்கு வாங்கிய நகையுடன் தலைமறைவாகியுள்ளார் கௌசி.
இந்தச் செய்தி கேட்டு உடைந்து போயுள்ளாராம் கபிலன். அழகுக்கு ஆசைப்பட்டு தனது பல வருட உழைப்பை இழந்துள்ளார் கபிலன்.
இந்தச் செய்தி, சிறுப்பிட்டி புறோக்கர் மூலம் வெளியே கசிந்து வருகின்றது!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x