புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கத்திகுத்து!! படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி..!

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் நேற்றையதினம்(03-03-2025) இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இதுவரை கிடைத்த தகவல்களின் படி ,
மட்டக்களப்பு நகரை அண்டிய கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் இரவு நேரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரு வியாபாரிகளுக்கு இடையில் இன்று திங்கட்கிழமை மாலை வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து ஆயித்தியமலையைச் சேர்ந்த குறித்த வியாபாரி உதவிக்கு தனது அண்ணனை அழைத்துள்ளார். குறித்த பகுதிக்கு அண்ணன் வருகை தந்ததையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக, சம்பவ இடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் ஆரம்பகட்ட தகவலாக உள்ளது.
இச்சம்பவத்தில் ஆயித்தியமலையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை பேத்தாழை பகுதியில் திருமணம் செய்து கெண்டவருமான ஒரு பிள்ளையின் தந்தையான டிலோஜன் (வயது -33) என்பவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலில் 7 இடத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி பாதியாக உடைந்த நிலையில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
May be an image of 8 people, segway, scooter, crowd and streetMay be an image of 3 people, car and textMay be an image of 10 people, lighting, street and textMay be an image of 2 people, lighting and street