புதினங்களின் சங்கமம்

மச்சான் ஜசிந்தன்… ஸ்கூலில என்னடாப்பா நடக்குது? அதிபரா இருந்து கொண்டு இப்படி நடக்கலாமா? ஏன் பக்கத்து வீட்டுக்குள்ள காரை விடுறாய்? வட இந்து ஆரம்ப பாடசாலையில் நடப்பது என்ன?

யாழ்ப்பாணத்தில இருக்கிற ஸ்கூல்கள் எல்லாத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை பாரதுாரமா ஓடிக் கொண்டிருக்கும். சில வேளை ஒரே நேரத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அது பொதுவானதுதான். பெரும்பாலான ஸ்கூல் சமாச்சாரங்களில் ஊழல் மற்றும் ஈகோ போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளே அதிகமாக இருக்கின்றது.

அதிபர்மார் ஆளுமை உள்ளவர்களா இருந்தால் இவற்றை எல்லாம் மூடி மெழுகி பூச்சுப் பூச்சி அதற்கு மேல் பெரிய வீ்ட்டையே கட்டி முடிச்சுப் போட்டு எதுவும் தெரியாதது போல் இருந்துவிடுவார்கள். ஆளுமை அற்ற அதிபர்கள் பாடசாலையை அந்தலசிந்தலமாக்கிவிடுவார்கள்.

பருத்திதுறை வட இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் ஜசிந்தனின் ஆளுமையற்ற செயற்பாட்டால் ஊடகங்களில் பேசுபொருளாகி கேவலப்பட வேண்டிய நிலைக்கு வந்துள்ளது குறித்த பாடசாலை. அந்தப் பாடசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் சிலருடன் சேர்ந்து அதிபர் செய்யும் செயற்பாடுகள் பெற்றோர் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாடசாலையில் ஒரு ஆசிரியை கற்பிற்கின்றார். அவரது பிள்ளையும் அந்தப் பாடசாலையில் கற்கின்றது. அந்த ஆசிரியையின் கணவர் மந்திகை வைத்தியசாலை உத்தியோகத்தர். அவரும் குறித்த பாடசாலை அபிவிருத்திக் குழுவில் இருந்ததாகவும் ஆனால் பாடசாலையில் நடக்கும் ஊழல்களைத் தட்டிக் கேட்டதால் அவரை பதவியிலிருந்து பாடசாலை நிர்வாகம் அகற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் குறித்த பாடசாலை ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கும் அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாகத் தெரியவருகின்றது.
இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய கடமை வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சத்தியபாலனுக்கு உரியது. ஆனால் சத்தியபாலன் எப்படியான வித்தைக்காரர் என்று எல்லோருக்கும் தெரியும்தானே… கொழும்பில போய் அரச விடுதியில் நிறை வெறியில் கூத்தாடி அவருக்கு எதிராக விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றது. இப்படியானவர் எப்படி பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார்?

கொழும்பு விடுதியில் குடித்து கூத்தடித்து யாழ்ப்பாணத்து கல்வி, கலை, கலாச்சாரத்தைக் கொழும்பில் பறைசாற்றிய நம்ம வடமராட்சிக் கல்விப்பணிப்பாளர் சத்தியபாலன்….

தனது பாடசாலையிலிருந்து குறித்த ஆசிரியையையும் பிள்ளையையும் அகற்றுவதற்கு அதிபர் பலதடவை முயன்று வந்ததாகத் தெரியவருகின்றது. இதற்கு சிகரம் வைப்பது போல் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற குறித்த ஆசிரியையின் பிள்ளைக்கு முதலாமிடத்தைக் கொடுக்காமல் விட்டதால் இருதரப்புக்கும் இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டி முடிவில் குறித்த ஆசிரியையின் கணவர் அங்கு வந்து அதிபர் ஆசிரியர்களை தாறுமாறாக திட்டியதாகவும் தெரியவருகின்றது. அதன் போது ஆசிரியையின் கணவர் வெறியில் நின்றதாக ஆசிரியர்கள் பலர் கூறியுள்ளார்கள். ஆனால் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் அவர் வெறியில் இல்லை என காட்டப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டியில் அதிபர், ஆசிரியர்களை ஏசியதாக கூறி, அதிபரின் ஆதரவாளர்களான இரு ரவுடிப் பெற்றோர்கள் அஜந்தன் மற்றும் செந்துாரன் ஆகியோர் ஆசிரியையின் கணவரை அடிப்பதற்கு துரத்திச் சென்றதாகவும் அப்போது ஆசிரியையின் கணவரான மந்திகை வைத்தியசாலை உத்தியோகத்தருக்கு விபத்து ஏற்பட்டு காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரியவருகின்றது.

அஜந்தனும் செந்துாரனும்

இருதரப்பினரும் மாறி மாறி பொலிசாரிடம் முறையிட்டதால் பொலிசார் இருதரப்பையும் நீதிமன்றில் நிறுத்திய போது ஆசிரியையின் கணவரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம் இரு ரவுடிப் பெற்றோரையும் பிணையில் விடுவித்துள்ளது. இந் நிலையில் திடீரென பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களை அழைத்த அதிபர் உடனடியாக ஆசிரியையையும் அங்கு கற்கும் ஆசிரியையின் பிள்ளையையும் பாடசாலையை விட்டு நீக்குவதற்கு பெற்றோரிடம் அனுமதி கேட்டு அதற்காக கையொப்பங்களும் வைக்க முற்பட்டுள்ளார்கள்.

இதனால் பல பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்து கையொப்பம் இடவில்லை என்றும் அவ்வாறு ஆசிரியை மற்றும் பிள்ளையை பாடசாலையிலிருந்து அகற்றினால் பிள்ளைக்கு கடும் மன உழைச்சல் ஏற்படும் எனவும் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கதைத்துள்ளார்கள். ஆனாலும் அதிபரும் அபிவிருத்திக் குழுவும் இருவரையும் நீக்க கடும் முயற்சி எடுத்ததாகத் தெரியவருகின்றது. பாடசாலைக்கு கூட்டம் என வந்த பெற்றோரை குறித்த பாடசாலை வாசலில் வைத்து வரவுப் பதிவேடு போல் பெயர்களை எழுதி கையெழுத்திட்டே கூட்டத்திற்கு அனுமதித்துள்ளார்கள். தற்போது அந்த வரவுப் பதிவேட்டு கையெழுத்தை வைத்து பெற்றோர்கள் இருவரையும் அகற்ற சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என உயரதிகாரிகளுக்கு காட்ட முற்பட்டுள்ளதாகப் பெற்றோர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க பாடசாலை அதிபர் தனது காரை பக்கத்தில் உள்ள பேக்கரியாகச் செயற்படும் வீட்டில் கொண்டு போய் நிறுத்துவது வழக்கமாம். அந்த பேக்கரி உரிமையாளரின் மனைவியுடன் அவர் நல்ல நட்பாம். அதன் காரணமாக பேக்கரி வீட்டுக்காரியின் சிபார்சின் பேரிலும் சில பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதித்துள்ளாராம். பேக்கரிக்குள் காரை விட்டுவிட்டு பாடசாலைக்கு செல்வது எம்மால் உறுதிப்படுத்தபட்டுள்ளது என்றாலும் பேக்கரி உரிமையாளரின் மனைவியுடனான நட்புக் காரணமாக மாணவர்கள் அனுமதிக்கப்படுகி்ன்றார்களா என்பதை எம்மால் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜசிந்தன் தனது மன சந்தோசத்திற்காக செய்யும் செயற்பாடுகளை நாம் இங்கு குறிப்பிடுவது சரியல்ல… ஆனால் அதனால் ஊழல்கள் இடம்பெறுமானால் அது தொடர்பாக ஆராயப்படத்தான் வேண்டும்.