Business

லிங்கத்தின் திருவிளையாடல் வேடிக்கை பார்க்கும் பிரதம செயலாளர்.. இடமாற்றம் வழங்கியும் 10 வருடங்களாக மீண்டும் அதே அலுவலகத்தில்!!

கைதடிவட மாகாண திட்டமிடல் செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரியும் S.உதயலிங்கம் என்பவர் 2015 ஏப்ரல் மாதம் இடமாற்றத்தில் அங்கு வந்துள்ளார். தற்போது கூட திட்ட மிடல் செயலகத்தின் கீழ் உள்ளூராட்சி அமைச்சுக்கு இடமாற்றம் எனக்கூறி மீண்டும் அந்த அலுவலகத்திலேயே 10 வருடங்களாக பணிபுரிகின்றார்.
உள்ளூராட்சி அமைச்சுக்கு சென்றால் களப்பணிக்கு செல்ல வேண்டிய தேவை உண்டு. எனினும் இவர் அங்கு செல்லாமல் திட்டமிடல் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு சில சட்ட ரீதியற்ற தேவைகளுக்கு மறைமுகமாக உதவி செய்து அதன் பிரதியுபகாரமாக குறித்த அலுவலகத்திலேயே பணிபுரிந்து  வருவதாக அரச உத்தியோகத்தர்கள் மட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.சக உத்தியோகத்தர்களை உயர் அதிகாரிகளுக்கு போட்டுக் கொடுப்பது உத்தியோகத்தர்களுக்கு நாட்டாமை வேலை செய்வது இவரது அரச சேவையாக உள்ளது.

திடடமிடலின் கீழ் மற்றைய அலுவலகங்களுக்கு இணைப்பு செய்யப்பட்டவர்கள் வெளிக்கள கடமைகளுக்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

அத்துடன் வார இறுதி நாட்களில் சிற்றுழியர்கள் இல்லாமல் அலுவலகத்தைத் திறந்து வேலை என்னும் போர்வையில் படம் பார்ப்பது, மேலதிக நேரம் கொடுப்பதற்காக கையொப்பமிட்டு விட்டு வீடு சென்று மாலையில் வந்து மீண்டும் கையொப்பமிடுவது போன்ற பல வேலைகளும் இவரால் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இவர் இரத்மலானை அரச விடுதியில் ஒரு பிரச்சினையிலிருந்து காப்பாற்றப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.gr