புதினங்களின் சங்கமம்

கொழும்பில் யுவதியை சூட்கேசில் முண்டமாக கொலை செய்த சந்தேகநபரும் தற்கொலை!! (photos)

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குருவிட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் பதுல்கும்புரவில் அமைந்துள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவரின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து விஷ போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

52 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபரான தற்கொலை உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் இறுதியாக வீட்டிற்கு வந்த சந்தர்ப்பத்தில் குறித்த கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடிதத்தில் அவர், எனது மூன்று பிள்ளைகளுடனும் சந்தோஷமாக இருங்க. காலம் கடந்து செல்லும் போது சோகம் மறந்து போகும். உலகம் உருவாகும், நிலைத்து நிற்கும், காணாமல்போய் விடும் இதுவே உலக நியதி… என்று குறிப்பிட்டுள்ளார்.

May be an image of 1 person and standingMay be an image of outdoors and treeMay be an image of one or more people, beard, outdoors and treeMay be a close-up of one or more peopleMay be an image of 1 person, tree and outdoorsMay be an image of 1 person and textMay be an image of 2 people, people standing and sunglasses