புதினங்களின் சங்கமம்

ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விட்ட மண் கொள்ளையர்கள் இவர்கள்தான்! வீடியோ Photos

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம். கிழவன்குளம். பதினெட்டாம் போர் . கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் அனுமதி பத்திரங்கள் பெறப்படாதும் சட்டவிரோதமாக ஆற்றிலே உழவு இயந்திரங்களை விட்டு மணல்களை ஏற்றி காட்டுப்பகுதிகளிலேயே மணல்களை பறித்து காட்டுக்குள் டிப்பர் வாகனங்களை கொண்டு சென்று மண் ஏத்துகின்ற மரம் கடத்துகின்ற பல்வேறு குற்ற செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பதினெட்டாம் போர் பகுதியில் இன்றைய தினம் நண்பகல் வேளையிலே ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் குறித்த விடயங்களை செய்தி சேகரிக்க சென்று இருந்தார்.
இதன்போது ஏ_9 வீதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் மணல் கொண்டு வந்து குவிக்கப்படுவதை காணொளி பதிவு செய்து கொண்டிருந்தபோது NP BFR 8429 மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர்  தவசீலன் அவர்களது ஒளிப்படகருவியை பறிக்க முற்பட்டதோடு அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு கொலை அச்சுறுத்தல் விடுத்து குறித்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
காட்டுக்குள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது மாத்திரமின்றி அங்கு வருகைதந்து யார் வீடியோ எடுக்க சென்னது என்றும் வீடியோ எடுக்க விடாது தடுத்து சட்டவிரோத மணலுடன் நின்ற உழவு இயந்திரத்தை அந்த இடத்தில் இருந்து எடுத்து சென்றதோடு  கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிசார் குறித்த காட்டுக்குள் செல்லும் வீதியை ஜேசிபி இயந்திரம் கொண்டு வெட்டி குறித்த காட்டுக்குள் செல்லமுடியாதவாறு செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் . தவசீலன் அவர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
May be an image of ‎ticket stub and ‎text that says "‎පොලක් පෝරම් QoO.1/B 1/B පැමිණිලී උදුපත முறைப்பாடு ஏற்றுக்கொள்ளல் Acknowledgement of Complaint පොලීස් ස්ථාතය பொலிஸ் நடலயம் Lam Police Station ] இேதி දිනය ooesloels Date පැමිණිලිකරුගේ නම முறைப்பாடு செய்பவரின் பெயர មពាក្រា Name Complainant தவலவ் ဦးကာဲပြာဲ..ရို့။ ကင်ခရေ...လ. ننهما Ianal لمعدواف කොරතුරු පොතේ යොමුව CJB II தகவல் புத்தத விபரம் Reference පැම් නිල්ලේ ස්වභාවය முறைப்பா்ட்டின் வகை Nature of Compiaint සටතන් කරන නිලධාරීයාගේ අත්සන முறைப்பாடு பதிபவரின் கையொப்பம் Signature of Recording Officer සටගක් කරන කලධාරීයාගේ කම. තකතුර ගා කළ අංකය (yps DÚurG பதியவின் பெயரும் பதவியும் பதிவிலககமும் Name Rank|& Reg. No. of Recording Officer 995 9903 AJAN Η 055656 5,000 (2021/01)P မီ ලංකා රජයේ මුදය දෙමාර්කමේන්තුව‎"‎‎May be an image of 1 person, hospital and text