இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த 22 வயது பரிணீதா மயங்கி வீழ்ந்து மரணமான காட்சி!! வீடியோ

நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இறந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் பரிணீதா ஜெயின். இவர் எம்.பி.ஏ பட்டதாரி. இவர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள விதிஷா சென்றுள்ளார். அங்கே திருமண நிகழ்ச்சியில் பரிணீதா நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று மயங்கி மேடையிலேயே சுருண்டு விழுந்திருக்கிறார்.

இவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றப்போது, இவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் இவர் இறந்துள்ளார்.

இவர் நடனமாட ஆட மயங்கி விழும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி, மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.