மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!! (Photos)
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியன மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் செங்கலடி பகுதியை சேர்ந்த 30வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ளார். இது தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.




