வவுனியாவில் அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சோதனையால் குழப்பம்!
வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் திடீரென நுழைந்த அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு இவ்வாறான சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதில்லை.
இந்த நிலையில் அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.