புதினங்களின் சங்கமம்

அடியாத மாடு படியாது!! யாழில் ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியூட்டிய நீதவான்!!

யாழ்ப்பாணம் தீவக வலயத்தின் முன்னணி பாடசாலை சம்பந்தப்பட்ட வழக்கில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணவர்களுக்குப் பயப்படாது ஆசிரியர்கள் மாணவர்களை ஒழுக்க நெறியில் உருவாக்க முன்வரவேண்டும் என்றும், ஒழுங்கீனமாகச் செயற்படும் மாணவர்களை வழிப்படுத்த

பெற்றோர்கள் எப்போதும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் உதவிபுரிவதுடன், இணைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்கள் மாணவர்களைத் திருத்த முற்படும்போது, சில மாணவர்கள் ஆசிரியர்களைத் திருத்த முற்படுகின்றார்கள். இவ்வாரான மாணவர்களால் சமூகச் சீரழிவுதான் ஏற்படும்.

மாணவர்கள் தாங்கள் மாணவர்கள் என்பதை உணர்ந்து கல்வியிலும் ஒழுக்கத்திலும் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் பாடசாலையின் ஒழுக்க விதிமுறைகளைக் கடைப்பிக்க முன்வரவேண்டும்.

பாடசாலை ஆசிரியர்களும் நிர்வாகமும் இவ்விடயத்தில் துணிந்து செயற்பட வேண்டும். பாடசாலைச் செயற்பாடுகளில் வெளியாரின் தலையீடுகள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு அறிவித்து இரண்டு நிமிடங்களில் அவர்களை அகற்றவேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவை வழங்கினார்.

இவ்வாறு இரண்டு பாடசாலைகள் செயற்பட்டால் ஏனைய பாடசாலை மாணவர்களும் நல் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க முன்வருவார்கள். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.