திருகோணமலையில் வாய்க்காலுக்குள் புரண்டு உருண்ட அம்புலன்ஸ்!! வீடியோ
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்புலன்ஸ் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்துள்ளது. இதில் அம்புலன்ஸ் வண்டியில் வந்த இருவர் காயமடைந்துள்ளார்.

