சும்மா ஒரு கிளீன்/ இராணுவ பண்ணைகளை மூடிவிவசாய அமைப்புக்களிடம் வழங்கி அபிவிருத்தி செய்தால்!!!!
இலங்கையில் கிளீன் சிறிலங்கா திட்டம. பேச்சளவில. தற்போது நடைமுறைப் படுத்தினாலும் செயலளவில் செய்ய வேண்டிய கிளீன்
குறிப்பாக பொருளாதார மேம்பாடு கருதி மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாய இடங்களில் இருந்து படையினரை கிளீன் செய்வாரா என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது.
இதில் வடக்கில் பல பண்ணைகள் இன்றுவரை படையினரின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது. அதிலே கிளிநொச்சி மாவட்டத்தில்
வட்டக்கச்சி விவசாய பண்ணையில் 394 ஏக்கர் நிலப்பரப்ப்பு,
ஜெயபுரத்தில் 120 ஏக்கர் பண்ணை,
மலையாளபுரத்தில் 798 ஏக்கர் பொதுப்பண்ணை,
சாந்தபுரத்தில் 680 ஏக்கர் பண்ணை, முழங்காவில் 1,800 ஏக்கர் மர முந்திரிகை தோட்டத்தின் பெரும்பகுதி என்பனவற்றுடன்
முக்கொம்பன் பகுதியில் உள்ள 100 ஏக்கர் தென்னம் தோட்டம் என்பனவற்றை இன்றும் இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை, முத்தையன்கட்டு பகுதியில் பல நூறு ஏக்கர் காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு இராணுவ பண்ணை அமைக்கப்பட்டுள்ளதோடு
துணுக்காய் தேறாங்கண்டல் பண்ணை,
கொக்குத்தொடுவாயில் முந்திரிகை செய்கைக்கு என தலா 25 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளையும் இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.
மன்னார் மாவட்டத்திலே வெள்ளாங்குளத்தின் 500 ஏக்கர் விவசாய பண்ணையும்
வவுனியா செட்டிகுளம் பகுதியில் தனியார் நிலத்தில் இராணுவத்தின் பெரும் பண்ணை உள்ளது.
வவுனியா தமிழர் நிலம் பகுதியிலும் 25 ஏக்கர் பரப்பளவில் இராணுவ பண்ணை இருக்கின்றது
இதில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மேற்குறித்த விவசாய பண்ணைகள் ஊடக மட்டும் ஆண்டு தோறும் 15 மில்லியன் வருமானத்தை இலங்கை இராணுவத்தினர் உழைத்து வருகின்றார்கள்
அதே போன்று கிளிநொச்சி மாவட்ட பண்ணைகள் ஊடக 13 மில்லியன் ரூபா வருமானத்தை இராணுவத்தினர் சம்பாதித்து வருகின்றார்கள்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலி.வடக்கில் படையினர் வசம் உள்ள 3112 ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான நிலப்பரப்பில் நூற்றிற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவம் தோட்டம் செய்து வருமானம் ஈட்டுகின்றது.
இது போதாதென்று பாதுகாப்பு சார் காரணங்களை நுண்ணிய வடிவில் வன்னியின் வாழ்வாதாரப் பிரச்சனை களோடு பிணைத்து விட்டிருக்கிறார்கள்
குறிப்பாக பொருளாதாரம் சார்ந்து மாற்றுத் தெரிவில்லாமல் பண்ணைகளில் கூலி வேலை செய்தால் தான் பிழைக்கலாம் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த இராணுவ பண்ணைகளை மூடிவிவசாய அமைப்புக்களிடம் வழங்கி அபிவிருத்தி செய்தால் வன்னி மட்டுமின்றி வடக்கு மகாணமே இலங்கை தீவின் விவசாய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு கணிசமாக பங்களிப்புச் செய்ய முடியும் இவை
இராணுவ நீக்க பிரச்சனை என்பதால் ஆட்சியாளர்கள் செய்ய மறுக்கின்றார்கள்
இவை படையினர் மேற்கொள்ளும் விவசாய நிலங கள் இவை தவிர்ந்த படை நிலைகளும் உண்டு இதில்
முல்லைத்தீவு வட்டுவாகலில் 680 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாமும், கேப்பாபுலவில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் விமானப்படை முகாமும், கரிப்பட்ட முறிப்பில் 6,200 ஏக்கர் முகாமும் இருக்கின்றது.
மன்னார் சன்னர் பகுதியில் 1,00 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இராணுவ முகாம் இருக்கும அதே நேரம் முள்ளிக்குளத்தில் 600 ஏக்கர் நிலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது
வவுனியா புளியங்குளம் பகுதியில் தனியார் காணிகளை அபகரித்து சிறப்பு அதிரடிப் படை முகாம் உள்ளது.
வவுனியா, மருதோடை சந்தியில் பல ஏக்கர் தனியார் நிலத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான்பகுதியில் 15 ஏக்கர் தனியார் நிலத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது .
ஒட்டுசுட்டான் சந்தியில் 50 ஏக்கர் அபகரிக்கப்பட்டு (சுடலை உட்பட) இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக 2019 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 679 ஏக்கர் தனியார் காணிகளும் 3,178 ஏக்கர் அரச காணிகளும் படையினர் வசம் இருந்தன
ஆனால் மேலதிகமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் தனது முகாம்களுக்காகவும் குடியிருப்புக்களுக்காகவும் கைவசப்படுத்தி வைத்திருக்கிறது
திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் ஏ9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது. இந்த இராணுவ முகாம் பகுதிக்குள் மழை காலத்தில் நீர் போக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள குளத்தின் வான் கட்டு முழுமையாக உடைத்து விடப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புக்குள் வடக்கின் பொருளாதாரம் முடங்கி கிடக்கின்றது . வடக்கு மாகாண பொருளாதார குறித்தும் அபிவிருத்துப் பேசும் எவரும் இந்த விடயங்களை பேசுவதில்லை எனவே அநுர அரசு பொருளாதார நிலைகளில் இருந்து படையினரைக் கிளீன் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் நெருக்கடி இதுஎனில் படையினர் மேற்கொள்ளாத தொழிலே இல்லை என்று கூறலாம் விடுதிகள், உணவகங்கள், சிற்றூண்டிச் சாலைகள் மட்டுமன்றி மடிவெட்டும் சலூன் கடைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. சலூன் கடைகளை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் இன்றும் தொழிலாக நடாத்துகின்றனர்.
இவை கிளீன் செய்யப்பட்டாலே தமிழர்களின் மனம் கிளீன் செய்யப்படும்.
நன்றி தயாளன்

