தமிழர் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து சுகாதார அதிகாரி ஜெய்னிகாந்த் சடலமாக மீட்பு..!
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இறுதியாக மிச்நகர் பகுதிக்கு பொறுப்பாக பணியாற்றினார் –
அண்மைக்காலமாக மட்டக்களப்பு கல்லடி பகுதியில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த நிலையிலேயே இன்று மாலை அயலவர்கள் விடுத்த தகவலை அடுத்து பூட்டிய வீட்டில் இருந்து அவர் சடலமாக போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளார்
மேலதிக விசாரணைகள் இன்று மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்-

