புதினங்களின் சங்கமம்

கூட்ட நெரிசலில் பஸ்சிற்குள் யுவுதி பாலியல் வல்லுறவு!! தென்னிலங்கையில் சம்பவம்!!

நிக்கவெரட்டிய இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் வைத்து யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் யுவதியை காப்பாற்ற முனைந்த நடத்துனர் மீது இருவர் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றிரவு நடந்த இச்சம்பத்தில் தொடர்புடையோர் தப்பி சென்றதாகவும் அவர்களை பிடிக்க கோரி இன்று நிக்கவெரட்டிய பேருந்து சபை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தெரிகிறது.

பொலிசார் சிறப்பு படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக குறிப்பிடுகின்றனர்.