புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் விதானையார் வீட்டில் நின்ற ஐயர் மீது தாக்குதல்!!

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள்  மீது  நபா்  ஒருவர் கடுமையாக தாக்கியதில்    குருக்கள் படுகாயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவா்  அணிந்திருந்த உருத்திராக்க மாலை மற்றும் தங்கச் சங்கிலி என்பன  அறுத்து வீசப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி கனகாம்பிகை குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை (07)     மீளாய்வு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை     மீளாய்வு செய்வதற்காக  சென்ற போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்  காயமடைந்த குருக்கள்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.