புதினங்களின் சங்கமம்

இயக்கச்சியில் கஞ்சா கடத்தி பிடிபட்ட செல்லக் குட்டி இவன்தான்!!

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் நபர் ஒரு விசேட அதிரடிப்படையினரால் இன்று(20.02.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் நபர் ஒருவர் இயக்கச்சி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5.660kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.