புதினங்களின் சங்கமம்

“ 03 மணிக்கு பின்னர் வந்தவங்களை கலைச்சு விடுங்கோ “ – யாழ் மாநகரசபையில் நடந்தது என்ன?

சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
யாழ் மாநகர சபையும் , அதன் வரியும்
இன்று யாழ் மாநகரசபைக்கு வரி செலுத்த சென்றிருந்தேன். நான் மூன்று மணிக்கு சற்று முன்னரே சென்று எனது சரியான வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன்.
மூன்றாவது நான்காவது மேசையில் ( Counter -03 or 04 ) இருந்த பெண் ஊழியர் ( மூலையில், அண்ணா கோப்பி பிள்ளையார் பட கலண்டருக்கு அருகில் இருந்த பெண் ஊழியர்) சற்று நேரத்தின் பின்னர் வரவேற்பு இடத்தில் நின்ற / காவலாளி அண்ணாவை நோக்கி
“ 03 மணிக்கு பின்னர் வந்தவங்களை கலைச்சு விடுங்கோ “ என்று கடும் தொனியில் சொன்னார். இது என்ன வகையான வார்த்தை பிரயோகங்கள் ??
இந்த வார்தைகளை மாநகரசபை ஆணையாளரே / மேயரோ கூறியிருந்தாலும் ஏற்புடையதல்ல. மக்களின் வீட்டு வரிப்பணத்தை வாங்கி பற்றுச்சீட்டு கொடுக்கும் ஒரு சாதாரண பெண் உத்தியோகத்தர் கூறியிருந்தை என்னால் ஏற்றுக்கொள்ளக் கூட முடியவில்லை. இவர்களுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது.
ஒரு வேளை நான் மூன்று மணிக்கு பின்னர் சென்று இப்படியான வார்தை என்னை நோக்கி பிரயோகிக்கபட்டிருந்தால் , நான் நேராகவே என் பதிலை அவர்களுக்கு புரியும் மொழியில் நன்றாக வழங்கியிருப்பேன், மாறாக முகப்புத்தகத்தில் புலம்பியிருக்க மாட்டேன்
03 மணிக்கு பின்னர் எந்த ஆடு , மாடுகளோ வரவில்லை. ஒரிருவர் மட்டும் வந்திருந்தார்கள். 03 மணிக்கு பின்னர் வரி செலுத்த முடியாது என்றால் கண்ணியமான வார்த்தைகளை பிரயோகித்திருக்கலாம்
36 வருடங்களா நாங்களும் வரி செலுத்துகின்றேன். குறைந்த பட்சம் தரம் பிரித்து கொடுக்கும் குப்பைகளை கூட எங்கள் வீட்டில் இருந்து ஒரு நாள் கூட அகற்றியதில்லை மேலதிக கட்டணம் ஏதும் வாங்காமல் , இப்படி இருப்பினும் நாங்கள் வரி செலுத்தி் கொண்டு இருக்கின்றோம். அதற்கும் மேல் இப்படியான வசைபாடின சொற்களையும் கேட்பது மக்களின் தலைவலி.
கொழும்பு மாநகர சபை 6/7 வருடங்கள் அல்லது அதற்கு மேலாகவே ஒன்லைன் கட்டணமுறையை அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் அதே வரிசை , அதே வசை பாடின சொற்கள்!!
மாற்றம் எல்லா இடத்திலும் தேவை !!