வடக்கு கிழக்கில் மீண்டும் பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களமயப்படுத்தல் திட்டங்களை துரிதப்படுத்த தொடங்கியிருக்கின்றது ஜேவிபி!
வடக்கு கிழக்கில் மீண்டும் பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களமயப்படுத்தல் திட்டங்களை ஜேவிபி துரிதப்படுத்த தொடங்கியிருக்கின்றது
அந்தவகையில் ஜேவிபியின் புத்தசாசன அமைச்சர் திரு ஹினிதும சுனில் செனவி அவர்கள் சட்டவிரோத குருந்தூர்மலை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரரை இன்று நேரில் சந்தித்து பேசி இருக்கின்றார்
இச் சந்திப்பின் போது திரு ஹினிதும சுனில் செனவி அவர்கள் வடக்கின் புராதன பௌத்த தளங்களை (?) பாதுகாக்க விசேட திட்டங்கள் ஊடக நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருப்பதோடு விரைவில் குருந்தூர்மலை உட்பட்ட தளங்களுக்கு நேரில் வர இருப்பதாக அறிவித்திருக்கின்றார்
இச் சந்திப்பில் கலந்து கொண்ட கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் சட்டவிரோத வவுனியா சபுமல்கஸ்கட விகாரையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது
மேற்படி தேரரின் அத்துமீறல்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்கள் தோறும் முன்வைக்கப்பட்டுள்ள போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
மறுபுறம் கிழக்கு மாகாணத்தில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவோம் என்கின்ற தலைப்பில் சர்ச்சைக்குரிய பாணமுரே திலகவம்ச தேரர் தலைமையில் 11 ஆம் திகதி முதல் திருகோணமலையில் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது
திருகோணமலை பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு தலைமை தாங்கும் இந்த தேரருக்கு அமைச்சரவை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது
இது போதாதென்று திருகோணமலை வெருகல் வட்டவன் கிராத்தில் இன்று புதிதாக தொல்லியல் நிலையம் ஒன்றை அடையாள படுத்திருக்கின்றார்கள்
இது தவிர யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் குறித்து கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றார்கள்
காங்கேசன்துறை , பலாலி , நயினாதீவு, நாவற்குழி, நெடுந்தீவு, தையிட்டி,வல்லிபுரம் ஊர்காவத்துறை, வலிகாமம், மட்டுவில், நிலாவரை, சுன்னாகம்,உடுவில், புலோலி கந்தரோடை,உட்பட்ட யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோரி வருகின்றது
அதே போல் இப் பகுதியில் சிங்கள மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாக தொல்லியல் திணைக்கள ஆலோசகர் எல்லாவல மேதானந்த தேரர் உரிமை கோருகின்றார்
குறிப்பாக தொல்லியல் திணைக்களத்திற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்தில் 17 இடங்களில் சிங்களவர்கள் வாழ்ந்ததாக எல்லாவல்ல மேதானந்த தேரர் அடையாளப்படுத்துகின்றனர்
Medhananda discovered evidence of a vibrant Buddhist civilization in the north and east of Sri Lanka. (Reference: The Sinhala Buddhist Heritage in the East and North of Sri Lanka)
இதன் தொடர்ச்சியாக நாவற்குழி சிங்கள குடியேற்றம் தவிர்ந்த வேறு குடியேற்றங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் ஜேவிபி யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி பரந்தளவிலான குடியேற்ற திட்டங்களுக்கு தயாராகின்றது
இயற்கைக்கு இசைவான மீள் குடியேற்றங்கள் , குடி பரம்பல்கள் குறித்து யாரும் கேள்விகளை முன்வைக்க முடியாது
ஆனால் இயற்கைக்கு மாறாக அரச நிதி உதவிகளுடன் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் சிங்கள குடும்பங்களை குடியேற்ற ஜேவிபி திட்டமிடுவது ஆபத்தானது
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினருக்கு காணிகளை பெற்று கொடுத்து அவர்களின் குடும்பங்களை குடியேற்ற திட்டமிடப்படுவதாக சொல்லுகின்றார்கள்
ஏற்கனவே சிங்களமயமாகி வரும் உயர் கல்வி நிறுவனமான யாழ்ப்பாண பல்கலை கழகம் எங்கள் அறிஞ்ர் பெருமக்களின் உதவியுடன் அடுத்துவரும் ஒரு சில வருடங்களில் முழுமையாக சிங்களமயமாகி விடும் என்கின்ற நிலையில் ஜேவிபி அடுத்த கட்டம் நோக்கி நகருகின்றது.
நன்றி
இனமொன்றின் குரல்

