புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் யானை துரத்தும் போது ஆற்றுக்குள் பாய்ந்த அப்பாவும் மகனும்!! அப்பா பலி!! வீடியோ

மட்டு கரடியனாறு பகுதியில் விறகுவெட்டப்போன இடத்தில் வந்த காட்டுயானையிடமிருந்து தப்பிக்க ஆற்றுக்குள் பாய்ந்த தந்தையும் மகனும். தந்தை உயிரிழப்பு மகன் நீந்தி உயிர் தப்பினார்
இன்று காலை மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முந்தனையாறு காட்டுப் பகுதியில் மகிழவெட்டுவானைச் சேர்ந்த தந்தையும் மகனும் விறகு வெட்டச் சென்ற நிலையில் அங்கு வந்த காட்டு யானையிடமிருந்து தப்பிக்க ஆற்றுக்குள் பாய்ந்த நிலையில் மகன் கரை சேர்ந்த நிலையில் 49 வயதான தந்தை காணாமல் போயிருந்த நிலையின் சடலமாக மீட்கப்ட்டுள்ளார்.