புதினங்களின் சங்கமம்

38 நாள் சிசு நிமோனியாவால் உயிரிழப்பு – யாழ் கரவெட்டியில் சோகம்!!

நிமோனியா காய்ச்சலுக்குள்ளான 38 நாள் சிசுவொன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது.

வதிரி, கரவெட்டியைச் சேர்ந்த இந்த ஆண் சிசு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது.

சிசுவின் மூக்குப் பகுதியூடாக குருதி வடிகின்றது என்று தெரிவித்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை சிசு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பயனின்றி சிசு உயிரிழந்தது.

கரவெட்டி திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூறாய்வுப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையில் நுரையீரலில் ஏற்பட்ட கிரிமித் தொற்றால் நிமோனியா ஏற்பட்டு சிசு உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.