சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 15 உழவியந்திரங்கள்
புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டதுடன்,
அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குளப்பகுதியில் வைத்து
உழவியந்திரங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.








