புதினங்களின் சங்கமம்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மகப்பேற்று நிபுணருக்கு எதிராக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த அறிக்கை!!

யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
இன்று வைத்திய நிபுணர் சிவஹரன் யோகராஜா தனது முகப்புத்தகத்தின் ஊடாக கீழே குறிப்பிட்ட இரு பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தையும் சாடி உண்மைக்கு புறம்பான தகவல்களை எழுதியதால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள் சில விளக்கங்களை கருத்துப் பகுதியில் தெரிவித்திருந்தோம்.
அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடனும், சுகாதார அமைச்சுடனும் தொடர்புகளை பேணுவதற்கு பல்வேறு வகையான தொடர்பு முறைகள் காணப்படுகின்றன. இருப்பினும், சமூக ஊடகத்தினூடாக இவ்வாறான பதிவுகளை வெளியிடுவது, அவதூறு பரப்பாமல், சமூகத்திற்கு தெளிவை வழங்கும் நோக்கத்திற்காகவே என நம்புகிறோம். இந்த நோக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகள் சரியான ஆதாரங்களுடன், உண்மைத்தன்மையை கொண்டவையாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
இருப்பினும், அவர் சரியான ஆதாரங்களைப் பயன்படுத்தி தனது பதிவை பலப்படுத்தாமல் கருத்துப் பகுதியில் பதிவு செய்த அனைத்தையும் நீக்கம் செய்திருக்கின்றார். அதனால், அந்த பதிவுகளை விளக்கங்களுடன் மீண்டும் இங்கே பதிவிடப்படுகின்றது.
#வைத்திய #நிபுணர் #சிவஹரனின் #முதலாவது #பதிவு#�“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அவற்றின் தரத்திற்கு ஏற்ற சேவையை வழங்குவதில்லை என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்……” (இணைப்பு1)
#பதில்�இக் கருத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். வைத்திய நிபுணர்களுக்கான இடமாற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் இந்த கருத்து எழுத்தப்பட்டுள்ளது.
வைத்திய நிபுணர்கள் நிரந்தர (end post), வருடாந்த இடமாற்றம் (annual list), பதிலீட்டு (replacement list) மற்றும் தற்காலிக (temporary) நியமனங்கள் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் நியமிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு வைத்தியசாலையின் வெற்றிட தேவைகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கூடிய இடமாற்ற சபையின் உறுப்பினர்களினால் ஆய்வு செய்து தீர்மானிக்கப்படுகின்றது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளில், இடையறா வைத்திய நிபுணர் சேவையை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளின் படி, தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்பட்ட பின்னரே தரம் A மற்றும் தரம் B ஆதார வைத்தியசாலைகளுக்கான வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
துரதிருஷ்டவசமாக, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரு வைத்தியசாலைகளும் தரம் B வைத்தியசாலைகளாகும்.
மேலும், நாட்டின் பொருளாதார நிலைமையினால் ஏற்பட்ட வைத்திய நிபுணர்களின் வெளியேற்றம் இவ் நியமணங்களில் மேலும் சிக்கலான நிலைகளை உருவாக்கியுள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் சந்தர்ப்பங்களை சாதகமாக்கி, சமூகத்திற்கு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவிட்டு பிழையாக வழிநடத்த வேண்டாம்.�அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்-வட மாகாணம்
#இரண்டாவது பதிவு�“வைத்திய நிபுணர்களுக்கான இடமாற்றங்கள் வெற்றிடம் பற்றிய சரியான அறிவு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களை விட எமக்கு அதிகமாக உள்ளது. எல்லோரையும் முட்டாளாக்க முயற்சி செய்ய வேண்டாம்.” (இணைப்பு-2)
#பதில்�யாழ் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில், போதனா வைத்தியசாலை, அதற்கு அடுத்த நிலையில் உள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை [A grade], பருத்துறை ஆதார வைத்தியசாலை [A grade] இரண்டுமே சத்ர சிகிச்சை வசதியுடன் கூடிய விடுதிகளையும், இரத்த வங்கி வசதிகளையும் கொண்டிருப்பதனால் இவ் இரண்டு வைத்தியசாலைகளிலும் இரண்டு பொது வைத்திய நிபுணர்கள், இரண்டு சத்திர சிகிச்சை நிபுணர்கள், இரண்டு பெண் நோய் நிபுணர்கள் மற்றும் இரண்டு குழந்தை வைத்திய நிபுணர்கள், மற்றும் மயக்க மருந்து நிபுணர் கடமை ஆற்றுகின்றனர். மேலும் அண்மையில் இவ்விரு வைத்தியசாலைகளுக்கும் உள்ளக பயிற்சி வைத்தியர்களும் நியமிக்கப்பட்டது அனைவரும் அறிந்தது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை [Grade B], மிக அண்மையில் தான் சத்திர சிகிச்சை நிபுணரும், பெண் நோய்கள் நிபுணரும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இரத்த வங்கி வசதிகள், மயக்க மருந்து நிபுணர் வசதிகள் சரியாக ஏற்படுத்தப்பட்ட பின்னர், சேவைகளின் தேவைகளின் அடிப்படையில் இரண்டாவது சத்திர சிகிச்சை நிபுணரும், இரண்டாவது பெண் நோய்கள் நிபுணரும், இரண்டாவது குழந்தை மருத்துவ நிபுணரும் நியமிக்கப்படுவர்.
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை [Grade B] தற்பொழுது சத்திர சிகிச்சை கூட (operation theatre) வசதிகள் இல்லாத நிலையில் காணப்படுகின்றது, எனவே அங்கு சத்திர சிகிச்சை மற்றும் பெண் நோய் நிபுணர் இன்னும் நியமிக்கப்படவில்லை. எனவே அங்கு ஒரு பொது வைத்திய நிபுணரும், ஒரு குழந்தை வைத்திய நிபுணரும் கடமை ஆற்றுகின்றனர். வசதிகளும் ஆளணிகளும் அதிகரிக்கப்படும் இடத்தில் சேவைகளும் அதிகரிக்கப்படும். ஆனால் தற்போது வரை யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து சத்திர சிகிச்சை நிபுணரும், பெண் நோய் நிபுணரும் தமது சேவைகளை வழங்கி வருவது தெரிந்த விடயமே.
தேவைகளும் சேவைகளும் இன்னும் அதிகரிக்கப்படாத இடத்தில் பெறுமதி மிக்க நிபுணத்துவ சேவையை வீணடிப்பது சிறப்பு அல்ல. மிக விரைவில் முயற்சிகள் கைகூடி மக்களுக்கு உரிய சேவைகள் விஸ்தரிக்கப்படும்.
#இரண்டாவது #பதிவில்�“எந்த ஒரு தொழிற்சங்கமும் இடமாற்ற சபையில் இடம்பெறாத போது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இடமாற்ற சபையில் இருப்பதால் நடக்கும் அநீதிகளும் லஞ்ச ஊழல்களும் பிரசித்தமானவை. அதற்கான விசாரணைகளும் நடைபெற்றன. நடைபெற்று வருகின்றன…..(இணைப்பு 3)
#பதில்�உங்களுடைய பதிவுகளில் அவ்வாறான புரிதல்கள் இருப்பதாக புலப்படவில்லை.
இதையும் தொரிந்து வைத்துக்கொள்ளவும்.�ஏறத்தாழ 95% மேற்பட்ட மருத்துவர்களை உறுப்பினர்களைக் கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தாபன விதிக்கோவையின் இவ் உரித்தின் பிரகாரமே இடமாற்று சபையில் இடம் பெறுகின்றனர்.
லஞ்ச ஊழல்கள் ஏற்படுவதாக மேலோட்டமாக கூறுவதைவிட, சரியான தகவல்களை ஆதாரத்துடன் விளக்குவது சிறந்தது. தகவல் அறியும் சட்டம் இருப்பதை நினைவூட்டிக் கொள்கின்றோம்.
#கருத்துப் #பகுதியில் #வினவியது�“GMOA- Northern Province அண்மையில் சுகாதார அமைச்சர் தான் இடமாற்ற சபையில் இடம்பெற்ற அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிக்கு எதிராக நடைபெற்ற இலஞ்ச விசாரணை பற்றி தெரியவில்லை என்றால் உங்கள் சங்க அங்கத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.”
#பதில்�அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடனும், சுகாதார அமைச்சுடனும் தொடர்புகளை பேணுவதற்கு பல்வேறு வகையான தொடர்பு முறைகள் காணப்படுகின்றன. இருப்பினும், சமூக ஊடகத்தினூடாக இவ்வாறான பதிவுகளை வெளியிடுவது, அவதூறு பரப்பாமல், சமூகத்திற்கு தெளிவை வழங்கும் நோக்கத்திற்காகவே என நம்புகிறோம். இந்த நோக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகள் சரியான ஆதாரங்களுடன், உண்மைத்தன்மையை கொண்டவையாக இருக்க வேண்டும்.