தாத்தா, மாமா,அண்ணா ஆகியோரால் உடல் உறவுக்கு உள்ளாக்கி கர்ப்பிணியான 13 வயதுச் சிறுமி!!

நாளாந்தம் இந்த சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. எனினும் சில சம்பவங்கள், பொலிஸ் முறைப்பாட்டுக்கு செல்கின்ற நிலையில் பெரும்பாலான சம்பவங்கள், சமூக அந்தஸ்து கருதி மறைக்கப்படுகின்றன.
அதிலும் ஒரு குடும்பத்துக்குள் இடம்பெறும் சம்பவங்கள் குடும்ப கௌரவம் கருதி, மறைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் மொனராகலை, எத்திமலே பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவர்,அவருடைய தாத்தா, தாய் மாமா மற்றும் மூத்த சகோதரன் ஆகியோரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

13 வயதுடைய இந்த பாடசாலை மாணவி வயிற்று வலிக்காக வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் கர்ப்பம் தரித்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது, தன்னை, தனது தாத்தா, மாமா மற்றும் மூத்த சகோதர் ஆகியோர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து, அவரின் சகோதரனை கைது செய்த பொலிசார், அவரது தாத்தா மற்றும் மாமாவை கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)