புதினங்களின் சங்கமம்

யாழில் ஐயர் வீடுகளில் லீலைகள் புரிந்து கொள்ளையடித்த ஜெயச்சந்திர மூர்த்தி பிடிபட்டது எப்படி?

யாழ்ப்பாணத்தில் உள்ள குருக்கள் வீடுகளில் நகைகள் செய்து தருவதாக பெற்று தலை மறைவாக இருந்த ஜெயச்சந்திர மூர்த்தி இணுவில் பகுதியில் மறைந்திருந்த நிலையில் போலீசாரிடம் பிடிபட்டான்

ஜெசந்திர மூர்த்தி என அழைக்கப்படும் குறித்த நபர் மட்டக்களப்பில் திருமணம் செய்ததாகவும் யாழில் உள்ள கோயில்களில் வெள்ளி வேலைகள் செய்து தருவதாக கூறி குருக்கள் மாருடன் நெருங்கி பழகியுள்ளான்.

இவ்வாறு பழகும் சந்தர்ப்பத்தில் தங்க ஆபரணங்கள் வேலைகளும் தனக்குத் தெரியும் என குருக்கள் மாரிடம் நகைகளைப் பெற்று பின்னர் அதனை வழங்காமல் தலைமறைவாக இருந்தான்.

இவனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இவனை போலீசார் தேடி வந்துள்ளனர்.

இணுவில் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தங்கி இருந்து இனி மேல் பகுதியில் உள்ள ஆலயங்களில் வேலை செய்வதாக தகவல் அறையப்பட்ட நிலையில் போலீசாரல் கைது செய்யப்பட்டுடான்.

இவனை இன்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய நிலையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.