வடக்கைப் புரட்டியெடுக்கும் மழை!! வடக்கு ஆளுநரின் அபயம் செயற்படவில்லை!!
வடக்கு மாகாணத்தை மழை புரட்டி எடுத்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் ஏராளமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். இந் நிலையில் ஆளுநரின் ”அபயம்” என்னும் பெயருடனான முறைப்பாட்டுப் பிரிவு செயற்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். தமக்கு ஏற்பட்டுள்ள அவசர அபாய நிலைகளைக் கருத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக முன்னைய ஆளுநரால் செயற்பாட்டில் இருந்த அபயம் தற்போது செயலிழந்துள்ளதாகவும் குறித்த பிரிவுக்கு தொலைபேசி மூலம் தகவல்களை கூற முற்பட்ட போது அப் பிரிவு செயற்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். 24 மணி சேவையாக குறித்த அபயம் முன்னைய ஆளுநர்களின் காலத்தில் முழுவீச்சில் செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

