யாழில் தமது ஊடக நிறுவனங்களுக்குள் நடக்கும் திருவிளையாடல்களை கண்டும் காணாமலும் இருக்கும் புலம்பெயர் ஊடக முதலாளிகள்……!
மூத்த ஊடகவியலாளர் கனகநாயகம் வேல்தஞ்சன் அவர்களின் பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
யாழ்ப்பாணத்தை நிலைகொண்டு இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் அதனை நடத்தும் ஐரோப்பிய, கனேடிய புலம்பெயர் தமிழ் ஊடகமுதலாளிகளுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன்
மாநிலத்துக்கும் அதன் தலை நகரமான வாஷிங்டன் டி.சி க்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்குமா? நான் நம்பவில்லை…. இங்குள்ள உள்ளூர் ஊடகர்களுக்கு குழப்பமிருந்தால் அதுகூட ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆனால் சர்வதேசங்களில் ஓடித்திரிந்தவர்களுக்கு ? இன்னமும் Germany , Yeman ஆகிய நாடுகளுக்கு வித்தியாசம் காட்டமுடியாத, Pakistan ஐ Bakistan என்று உச்சரிப்போர், அவர்களோடு சேர்ந்து தமிழ்த் தேசியத்தை ” சுடுகாட்டுக்கு” அனுப்பும் PLOTE இயக்கத்தின் பெயரையே BLOTE என்று உச்சரிப்போர்….தலிபானுக்கும் தலித் து க் களுக்கு வித்தியாசம் தெரியாதோர் புலம் பெயர் ஊடகங்களில் வேலை செய்கிறார்கள் !
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் “Communication and Media Studies” தனித்துறையாக உள்ளது. முப்பது நாற்பது ஆட்கள் வருடம்தோறும் pass out ஆகிறார்கள். அவர்களில் அனேகர் ( எல்லாருமல்ல) பார்த்துப் பிழையாகவாசிப்போர் தான்… பொது அறிவு மருந்துக்கும் கிடையாது…..25 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் படித்து மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு நியமனம்பெற்று வந்த ஒரு அலுவலர் அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் அக்காலத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ( TULF – Tamils United Liberation Front)…. மூத்த முக்கியஸ்த்தர் ஒருவரின் நெருங்கிய உறவினர் கையில் ஒரு ஆங்கிலக் கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு….. சிரேஸ்ட அலுவலர் ஒருவரைப் பார்த்து….” சேர்( ஒரு Chief Clerk) ! TULF என்றாலென்ன” என்று கேட்கிறார். அவர் உரிய ஆங்கில விரிவாக்கத்தைச் சரியாக தெளிவாகச் சொல்கிறார்.( அவர் பின்னர் SLOS சேவைப்பரீட்சையில் சித்தியடைந்து மத்திய கிழக்கிலும் கிழக்காசியாவிலும் பணியாற்றியவர்…அவர் SLOS சித்தியடைந்த போது பட்டதாரியல்ல)
அந்த பட்டதாரி அலுவலர் லிவ்கோ ஆங்கில- தமிழ் அகராதியைப் புரட்டி புரட்டி மொழிபெயர்த்து TULF ஐ ” தமிழர் ஐக்கிய விடுதலை நிதியம்” எனமொழிபெயர்த்துக் கொடுத்தார்….அந்த Chief Clerk கொல்லென்று சிரித்துவிட்டு உரிய திருத்தங்களை மேற்கொண்டார்…..
Front ஐ Fund ஆக்கி விட்டார் “பட்ட” தாரி!
இந்த உரையாடலை நான் உடனடுத்த ஒரு பகுதியில் நின்று கேட்டுக்கொண்டிருந்தேன்.
மேற்படி சம்பவம் எத்தனை பழுதுகளை எமக்குப் புரிய வைக்கிறது தெரியுமா ?
அதாவது சமூக பிரக்ஞையும் தேடலும் வாசிப்பும் அறவே அற்றசமூகம் கால் நூற்றாண்டுக்கு முன்பே உருவாகத் தொடங்கிவிட்டது. உருவாகியவர்களில் பிழை இல்லை….பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படிப்பித்த படிப்பிக்கும் ஆசிரியர்களில்தான் பிழை…. இந்த விறுத்தத்தில் கோட்டு சூட்டு ரை கட்டி படம் வேறு fb இல்…..
சம கால jokes பல உண்டு. நான் யாழ். கல்வித் திணைக்களத்தில் வேலைசெய்த காலத்தில்( 19 வருடங்களுக்கு முன்பு) கல்விப் பணிப்பாளர் கரவெட்டி செல்வரட்ணம் ( காலமாகிவிட்டார்) ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான ஒரு interview board இல் தலைவர். அமரர் செல்வரட்ணம் கந்தரோடை Skanda இல் ஒறேற்றர் சுப்ரமணியம் அதிபராக இருந்த காலத்தில்படித்தவர். ஒரு கொதியன்….ஆனால் நல்ல பகிடிகள் விடுவார். Basically அவர் ஒரு strict and duty minded பேர்வழி !அவர் ஆண், பெண் ஆசிரியர்கள் அனைவரிடம் “What has brought you to this interview ? ” என்ற கேள்வியைக் கேட்டார். அனேகமான ஆண் ஆசிரியர்கள் ” By motorbike ” என்றும் அனேகமான பெண் ஆசிரியைகள் ” Husband ” என்றும்பதிலளித்தனராம். இவர்களில் பாடசாலைகளில் ஆங்கிலம் படிப்பிக்கும் சிலரும் இருந்தனர். அத்துடன் 95% பேர் யாழ்ப் பல்கலைக் கழகத்தில் கற்றோர். அதுமட்டுமல்ல English medium த்தில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தோர். இவர்கள்போன்றவர்களில் பெரும்பாலோர்(சமூக அக்கறையும் மொழிப்புலமையும் தேடலும் வாசிப்பும் நிறைந்த பொது அறிவுமுள்ளவர்கள் சிலர் உள்ளனர். நான் அவர்களைப் போற்றி வணங்குகிறேன்) இன்று உயர் நிலைக் கல்வி நிர்வாகிகள் வடக்கில்….
இவர்களின் கல்வி நிர்வாகத்தில் படித்து விட்டு….யாழ் பல்கலையில் பட்டதாரி களாக…… வெளியேறும் ஊடகவியலாளர்களை, தாங்கள் சமூகம் , உலகம் அடியுண்டதாகச் சொல்லும் ஊடக முதலாளிகளான புலம்பெயர் ஜாம்பவான்களும் திருத்திச் செப்பனிடுவதில்லை….. ( அவர்களுக்கு வேறு கனக்கச் சோலி சுரட்டுக்கள்…..)
…..ஒரு சமூகத்தின் சிந்தனையை வடிவமைப்பவை மூன்று
1) பாடசாலைகளும் உயர் கல்வி நிறுவனங்களும்
2) ஊடகங்கள்
3) அரசியல் ஸ்தாபனங்கள்(அரசியல் கட்சிகள்)
இவ்விடங்களின் மனித ஆளணியில்பெரும்பாலோர் எப்படியான உற்பவிப்புக்கள் ?
(சமூக அக்கறையும் மொழிப்புலமையும் தேடலும் வாசிப்பும் நிறைந்த பொது அறிவுமுள்ளவர்கள் சிலர் உள்ளனர். நான் அவர்களைப் போற்றி வணங்குகிறேன்)
கடந்த 25 வருடங்களுக்கு முன்பிருந்து என்ன நடைபெற்றன என்பதும் எமது சமூகத்தின் தோல்விகளுக்கும் சீரழிவுகளுக்கும் மூலகாரணங்கள் எவை என்பதும் புரிகிறாதா ?
இப்பொழுது அமெரிக்க மானிலமான
Washington State இல் கடும் அசாதாரண கால நிலை…இருவர் சாவு பலர் காயம்..
ஆனால் எங்கள் தமிழ் ஊடகங்கள்
Washington D.C. க்கும் Washington State க்கும் வித்தியாசம் தெரியாமல் போயினர்.
“இது ஒன்றும் உயிர் போற பிழை இல்லையப்பா…..உதுகள் சனத்துக்கும் விளங்காது…சரி விளங்கினால் கூட என்ன நஸ்டம் எங்களுக்கு….என்ன இலாபம் சனத்துக்கு…. ?” என்று முணுமுணுக்கிறார் ஒரு புலம்பெயர் ஊடக ஜாம்பவான்….
What is the difference between Washington D.C. and Washington state? What can be considered the “true” America?
Washington, D.C. and Washington state are two distinct entities in the United States, each with its own unique characteristics.
Washington, D.C.
Location: Washington, D.C. (District of Columbia) is a federal district situated between Maryland and Virginia on the east coast of the United States.
Function: It serves as the capital of the United States and is the center of the federal government, housing key institutions such as the White House, Congress, and the Supreme Court.
Population: As of the 2020 census, the population is around 700,000, with a diverse urban environment.
Governance: D.C. has a unique political status, as it is not a state and has limited representation in Congress. Residents can vote in presidential elections, but they have no voting representation in Congress.
Washington State
Location: Washington state is located in the Pacific Northwest region of the United States, bordered by Canada to the north, the Pacific Ocean to the west, and Oregon to the south.
Function: It is a state within the U.S. and is known for its varied geography, including mountains, forests, and coastlines. Seattle, the largest city, is a major cultural and economic hub.
Population: As of the 2020 census, the population is over 7.7 million, with a mix of urban and rural communities.
Governance: Washington state has its own government and full representation in Congress, including two Senators and a number of Representatives based on its population.
“True” America
The concept of the “true” America is subjective and varies based on individual perspectives. Here are a few interpretations:
Cultural Diversity: Some may argue that true America is reflected in its cultural diversity, seen in urban areas like D.C. and Seattle, where different cultures, ideas, and lifestyles converge.
Historical Significance: Others might view true America as tied to its historical roots, which can be found in places with significant historical events and institutions, such as D.C. with its monuments and memorials.
Geographical Representation: Some may consider the vast landscapes and rural communities of Washington state as representative of the American spirit, emphasizing nature, independence, and regional identity.
Ultimately, the “true” America encompasses a blend of experiences and identities from both Washington, D.C. and Washington state, as well as the diverse regions and cultures across the entire country.

