புதினங்களின் சங்கமம்

யாழில் பெண் சட்டத்தரணி வீட்டில் கோடிக்கணக்காக கொள்ளையிட்ட வேலைக்காரியும் அவளது கள்ளக்காதலனும் கைது!!

யாழ். நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத வேளையில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிடப்பட்டது.இச் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரையும், குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த திருட்டு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், கைதான சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில் சட்டத்தரணி வீட்டில் கோடி கணக்கில் பணம் கொள்ளை... சிக்கிய பணிப்பெண்! | Crores Of Money Stolen From Lawyer House In Jaffna