புதினங்களின் சங்கமம்

பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவரின் கதிரையில் போய் அமர்ந்து எழும்ப மறுத்து அர்ச்சுனா அதகளம்!! !!

புதிய பாராளுமன்ற அமர்வு இன்று முதல்முதலாக ஆரம்பித்த நிலையில் வைத்தியர் அர்ச்சுனா பாராளுமன்ற எதிர்க்கட்சிதலைவரின் ஆசனத்தில் போய் இருந்துள்ளார். இந் நிலையில் அவரை அங்கிருந்து எழுந்து செல்லுமாறு பாராளுமன்ற ஊழியர் ஒருவர் தயவாக கூறியுள்ளார். அதற்கு அர்ச்சுனா ஏன் நான் இந்தக் கதிரையிலிருந்து எழும்ப வேண்டும்? என கேட்ட போது அது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசாவின் கதிரை என பாராளுடன்ற ஊழியர் கூறியுள்ளார். அதற்கு அர்ச்சுனா ”அப்படி கதிரையில் எழுதியுள்ளதா” என கேட்டு பாராளுமன்றத்தை அதகளப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார் டாக்டர் அர்ஜுனா இராமநாதன்…
அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்கிறார் அர்ஜுனா..
புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்… ஆனால் ஜனாதிபதி , பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என்கிறார் அர்ஜுனா…
அநேகமாக இனி சபைக்குள் சரவெடிதான்.