யாழ் வாக்கெண்ணும் நிலையத்தில் அர்ச்சுனா பொலிசாருடன் மோதல்!! கலகம் அடக்கும் பொலிசார் களத்தில்!! வீடியோ
பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சற்று முன்னர் கலகத் தடுப்பு பொலிஸாரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஓ.எல் கூட படிக்காத நாய்கள்தான் இந்தப் பொலிசார் என கூறி அர்ச்சுனா பெரும் கலவரம் புரிந்ததாக தெரியவருகின்றது.

