கிளிநொச்சியில் பாதுகாப்புத்தரப்பு சுற்றிவளைத்தது ஏன்?? சுமந்திரனின் அலங்கோலங்கள்!! உணருவார்களா மக்கள்??(Photos)
இந்தப் படத்தைப் பார்த்தால் ஏதோ ராணுவச் சுற்றிவளைப்பு போல தோன்றலாம். ஆனால் இது ராணுவச் சுற்றிவளைப்பு அல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின், இல்லை இல்லை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், அரச சட்டத்தரணியுமான சுமந்திரன் இன்று கிளிநொச்சி கனகபுரத்தின் தெருக்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் காட்சியாம்.
ஒரு தமிழ்ப்பிரதேசத்தில், தமிழர்களே செறிந்து வாழும் பிரதேசத்தில், ஒரு தமிழ்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் , இவ்வளவு படை பலத்தோடு செல்கிறார் என்றால் அவர் மேல் அரசாங்கம் கொண்டுள்ள அதீத அக்கறையையும் தீவிர பாசத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகளின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அவர்களின் பெயரைச்சொல்லி அவர்கள் தியாகத்திலும் உயர்வாழ்ந்து கொண்டு, புலிகளுக்கு எதிரான படையினரின் பாதுகாப்பு பலத்தோடு, புலி வீரர்களின் உயிர்த்தியாகம் நிறைந்த , மாவீரர் துயிலுமில்ல வீதியில் இவ்வாறு செல்வது மக்களுடைய மனங்களிலே வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துமே தவிர, வசீகரிக்கப் போவதில்லை.



