யாழில் பலரிடம் பல கோடி ஏமாற்றி தலைமறைவான நபர்!! மனைவி விவாகரத்து என கூறியது ஏன்? நள்ளிரவு மனைவியை படுத்திருந்த போது பிடிபட்டது எப்படி?
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட விஷேட குற்ற விசாரனை பிரிவின் பொறுப்பதிகாரி Ip. G .குனரோயன் தலமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சுற்றிவளைவில் 7வருடங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது செய்யபபட்டான்.
கடந்த வைகாசி மாதம் கிடைக்கபெற்ற முறைப்பாட்டில், பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக ஒட்டுமடம் தேவாலய வீதியை சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் விஷேட குற்ற விசாரனை பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த ஏழாம் மாதம் ஒருவரும் பத்தாம் மாதம் ஒருவரையும் கைது செய்தனர். பின்னர் குறித்த விசாரனையின் பிரதான சந்தேக நபரான ஒட்டுமடம் பகுதியை சேர்ந்த நபர் தலைமறைவாக இருந்த வேளை, அவரது மனைவி பிள்ளைகள் தலையாழி கொக்குவில் பகுதியில் பிரிந்து வாழ்வத்கவும் வெளி உலகத்திற்கும் நம்ப வைத்துவிட்டு, களவாக மனைவி பிள்ளைகளையும் சந்தேகநபர் சந்தித்து வந்தான். அவ்வாறு சந்திக்க வந்த நேரம் மாவட்ட விஷேட குற்ற விசாரனை பிரிவிற்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக, நள்ளிரவு ஒரு மணியளவில் குறித்த சந்தேக நபரின் வீட்டினை சுற்றிவளைத்து, பிரதான சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். பின்னர் இவரிடம் விாரனைகளை மேற்கொண்ட பொழுது 2017இல் இருந்து தலைமறைவாகவும் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக பிரதான முகவராக செயற்பட்டு, விடுதிகளில் தங்கியிருந்து பண மோசடிகள் செய்ததாகவும் மற்றும் கொழும்பில் தங்கியிருந்து ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்தது.
இவருக்கு 2017ம் ஆண்டு மல்லாக நீதிமன்றில் பகிரங்க பிடியானையும் பிறப்பிக்கபட்டிருந்தமையும் மற்றும் வவுனியா நீதவான் நீதிமன்றில் 1கோடி 29 இலட்சம் மோசடி வழக்கில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக குறிப்பிடபட்டுள்ளது. மற்றும் மல்லாக நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கில் 27இலட்சத்து 50ஆயிரம் பணமோசடியில் தேடபடும் சந்தேக நபரும் ஆவார்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக வவுனியா ,மல்லாகம்,யாழ்ப்பாணம் போன்ற நீதிமன்றில் 3 கோடியே 50ஆயிரம் பணமோசடியான வழக்கு நிலுவையில் உள்ளது. இவரை நேற்று குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கு பதிவு செய்து யாழ்ப்பணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொழுது, இவரை எதிர்வரும் 13திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு யாழ்ப்பாணம் கொளரவ நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களினால் விடுக்கப்பட்ட ஒரு வேண்டுகோள்
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி அப்பாவிகளை ஏமாற்றும் பண மோசடி சம்பந்தமான முறைப்பாடு நூறுக்கு மேற்பட்டதாக பதிவு செய்யபட்டுள்ளது. இளைஞர்கள் வெளிநாடு செல்லும் மோகத்தினால் பதிவுசெய்யபடாத வேலைவாய்பு பணியகத்தில் பதியபடாத முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். எத்தனையோ பேர் ஆதாரங்கள் இல்லாமல் முறைப்பாடு போடமல் உள்ளார்கள். எனவே அவதானமாக இருக்குமாறு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் விஷேட குற்ற விசாரனை பிரிவின் பொறுப்பதிகாரி கேட்டுள்ளனர்.