புதினங்களின் சங்கமம்

யாழில் நிறைவெறியில் ஆட்டோவில் சென்று காருடன் மோதிய பொலிஸ் வீதியில் உருண்டு புரண்டு அட்டகாசம்! Photos!

யாழ் இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு முன் இன்று மாலை நிறை வெறியில் wpABV 1448 என்ற இலக்கத்தை கொண்ட பொலிஸ்  ஓட்டோவில் சென்ற 2 பொலிசார் காரை பின்பக்கமாக மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். அத்துடன் ஏராளமானவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது நிலத்தில் நிறை வெறியில் உருண்டு பிரண்டு கத்திக் குளறியபடி இருந்துள்ளார்கள். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிசாரால் விபத்துக்கு உள்ளான கார் சான் ரூறிஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது எனத் தெரியவருகின்றது. குறித்த காரை வாடகைக்கு ஒருவர் எடுத்துச் சென்ற போதே பொலிசார் ஆட்டோவில் நிறை வெறியில் சென்று காரை இடித்துத் தள்ளியுள்ளார்கள். இந் நிலையில் அங்கு மக்கள் கூடத் தொடங்கவே அவர்களை இரு பொலிசாரும் அச்சுறுத்தி தள்ளாடித் தள்ளாடி நிலத்தில் உருண்டு பிரண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந் நிலையில் குறித்த இரு பொலிசாரும் கடமையாற்றும் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த சிவில் உடைதரித்த பொலிசார் பொதுமக்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டதுடன் கார்காரருடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் விபத்தை ஏற்படுத்தி வெறியில் கிடந்த பொலிசாரை உடனடியாக அங்கிருந்து அகற்றியும் உள்ளார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x