புதினங்களின் சங்கமம்

கொழும்பிலுள்ள விடுதி அறையில் காதலியை தங்க வைத்து காதலன் செய்த திருவிளையாடல்கள்!!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் தனது காதலியை பயன்படுத்தி பாரியளவில் போதைப்பொருள் விநியோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, நாரஹேன்பிட்டி ஆகிய பிரதான இரவு விடுதிகளில் நடனமாடும் தனது காதலியை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளார்.

கஸ்கிஸ்ஸ சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினரால் பாரிஸ் என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்இதன்போது 70,00000 ரூபாய் பெறுமதியான 35900 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், 900 போதைப்பொருள் LSD முத்திரைகள் மற்றும் 18 எக்ட்ரீஸ் மாத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொக்கிளாய் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், கல்கிஸ்ஸ பகுதியில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீட்டில் பலத்த பாதுகாப்பில் தங்கியிருநு்துள்ளார்.கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடனமாடும் அவரது 23 வயது காதலி ஊடாக இரவு விடுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தனது காதலியுடன் வீட்டில் தங்கியிருந்த போது, ​​உப பொலிஸ் பரிசோதகர் சாமிக்க ஜயவீர உள்ளிட்ட குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் மாலைதீவு மற்றும் நைஜீரிய நபர்களிடம் இருந்து போதைப்பொருட்களை பெற்று, வீட்டில் இருந்து பொதி செய்து தனது காதலி மூலம் இரவு விடுதிகளுக்கு விநியோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x