FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

கள்ளக் காசு அடிக்கும் கும்பலுடன் யாழில் உள்ள இரு பிரபல வர்த்தகர்களுக்கு தொடர்பு!! பல கோடியில் கலியாணம்!! முதலாளி கேடியா?

யாழில் கள்ளக்காசு அடித்து விநியோகிக்கும் முக்கிய இரு வர்த்தகர்கள் தொடர்பாக பல்வேறு தரப்புக்களும் தகவல்களை கொடுத்தும் இவர்கள் இன்னும் முறையாக பிடிபடாது உள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன்தினமும் இவர்களின் கள்ளப்பணம் அடிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர்களில் ஒருவனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் ஏனையவர்களை தப்பிவிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. திருநெல்வேலி சந்தைப் பகுதியில் செயற்படும் பிரபல வர்த்த நிலையத்தை நடத்துபவர்களும் யாழ் கொக்குவில் பகுதியில் செயற்படும் பிரபல அரிசி ஆலை ஒன்றின் முதலாளியுமே இந்த கள்ளப்பண மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வர்த்த கூட்டுப் பங்காளிகளுக்கு பணம் அச்சிடும் தாள்கள் மற்றும் அதற்கான உபகரணங்களை கொடுப்பதற்காக வந்த கும்பல் ஒன்று அரியாலையில் தங்கியிருந்துள்ளது. அந்தக் கும்பலில் ஒருவன் இவர்களிடம் குறித்த உபகரணங்களைக் கொடுப்பதற்காக வந்த போது பொலிசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவன் கைது செய்யப்பட்டுள்ளான். ஆனாலும் அவன் கைதான விடயத்தை அறிந்த ஏனையவர்கள் அரியாலைப் பகுதியிலிருந்து ஓடித்தப்பி விட்டதாகத் தெரியவருகின்றது. மிகவும் சூட்சுமமான முறையில் யாழில் உள்ள குறித்த இரு வர்த்தகர்களும் கள்ளப்பணம் விநியோகத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வர்த்தகர்களின் ஒருவனின் மகளுக்கு அண்மையில் பல கோடி ரூபா செலவு செய்து திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.